» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 7 ஆயிரம் வழக்குகள் விசாரணை

சனி 14, செப்டம்பர் 2019 1:03:17 PM (IST)

நெல்லையில் இன்று நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 7 ஆயிரத்து119 வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆலோசனை குழு சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது வழக்கு விசாரணையை தொடங்கி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சுபா தேவி, மாவட்ட நீதிபதிகள்  அருள் முருகன், விஜயகாந்த், சந்திரா, இந்திராணி மற்றும் டாக்டர் பூவலிங்கம், முருகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெல்லை நீதிமன்ற வளாகத்தில் 9 இடங்களிலும் மாவட்டங்களில் 16 இடங்களிலும் என மொத்தம் 25 இடங்களில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 

இதில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கி கடன் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சுமுகமான தீர்வு காணப்படுகிறது.நீதிமன்ற நிலுவையில் உள்ள 5 ஆயிரத்து 157 வழக்குகளும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத ஆயிரத்து 962 வழக்குகள் என மொத்தம் 7 ஆயிரத்து 119 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில்  ஏராளமான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வைக்கப்பட்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory