» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி ரயிலில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் அவதி

சனி 14, செப்டம்பர் 2019 12:36:25 PM (IST)

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட அந்த ரயிலில் குளிர்சாதன வசதி செயல்படாதது குறித்து புகார் செய்தும், அதனை சரிசெய்யவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.ரயில் மதுரை வந்தடைந்ததும் பயணிகள் கீழே இறங்கி ரயில் நிலைய மேலாளரிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து ரயில்வே மின் ஊழியர்கள் விரைந்து வந்து ரயிலின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட மின் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கோளாறை முழுமையாக சரி செய்ய இயலவில்லை .மேலும் ஏசி பெட்டியின் ஒரு பகுதியில் மட்டும் சரி செய்யப்பட்ட நிலையில் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory