» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தொழிலாளியிடம் பணம் பறிப்பு: இரண்டு பேர் கைது

சனி 14, செப்டம்பர் 2019 11:19:01 AM (IST)

கொல்லங்கோடு அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கண்ணநாகம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (32). இவர் இரு நாள்களுக்கு முன்பு ஊரம்பு சந்திப்பில் நின்றிருந்தபோது அங்கு வந்த இருவர் மது அருந்த பணம் கேட்டனராம். சசிகுமார் பணம் கொடுக்க மறுக்கவே இருவரும் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 700-ஐ பறித்துச் சென்றனராம்.இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் பறித்துச் சென்றது சூழால் பகுதியைச் சேர்ந்த ஜெயசிங் (47), அஜீஸ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory