» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரள அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பரிதாப பலி

சனி 14, செப்டம்பர் 2019 10:19:16 AM (IST)

நாகர்கோவில் அருகே கேரள அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தார்.

தக்கலை அருகேயுள்ள பனவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஈனோக் ஜான் (46). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று காலை நாகர்கோவிலிலிருந்து தக்கலை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம். தோட்டியோடு அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த கேரள மாநில அரசுப் பேருந்து மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory