» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு பேருந்து மோதி பைக்கில் சென்றவர் பலி

வெள்ளி 13, செப்டம்பர் 2019 8:30:52 PM (IST)

தோட்டியோடு அருகே கேரள அரசு பேருந்து மோதி பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் தக்கலை அருகே பனவிளையைச் சேர்ந்தவர் ஈனோக்ஜான் (46). இவர் இன்று காலை நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி மோட்டார்பைக்கில் சென்று கொண்டிருந்தார். தோட்டியோடு அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை அவர் முந்த முயன்றார். அப்போது எதிரே வந்த கேரள அரசு பேருந்து, ஈனோக் ஜானின் மோட்டார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈனோக்ஜான் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். 
 
இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஈனோக் ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory