» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மோட்டார் பைக் மோதி தொழிலாளி பலி

வெள்ளி 13, செப்டம்பர் 2019 6:21:25 PM (IST)

அருமனை அருகே மோட்டார்பைக் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன் (74).சம்பவத்தன்று வீட்டில் இருந்து பொருட்கள் வாங்கு வதற்காக அருமனை- மேல் புறம் சாலையில் குட்டப் பன் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.அப்போது அவருக்கு பின்னால் மோட்டார்பைக்கில் இளைஞர் ஒருவர் வந்தார். எதிர்பாராத விதமாக அந்த வாலிபர் குட்டப்பன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந் தார்.

இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்யப் பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மோட் டார் சைக்கிளை ஓட்டி வந்தது களியல் பகுதியை சேர்ந்த சுனில் (27) என்பது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் சுனில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory