» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிக அளவு கடன்களை வழங்க வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியர் வேண்டுகோள்

வெள்ளி 13, செப்டம்பர் 2019 5:39:44 PM (IST)கிராமப்புற ஏழை மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற அதிக அளவு கடன்களை வழங்க, வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த மு.வடநேரே, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் இன்று (13.09.2019) நடைபெற்ற வங்கியாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார்.

நடைபெற்ற கருத்தரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:- 1கிராமபுற மக்கள் அனைவரும் சுய உதவி குழுக்கள் உருவாக்கி, தங்கள் பொருளாதார நிலையை உயர்த்தி முன்னேற வேண்டும். அதற்கு, வங்கியாளர்கள் கிராமப்புற மக்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி அவர்களுக்கு தேவையான கடனுதவிகளை வழங்க வேண்டும். கிராம மக்கள் சிறப்பான தொழில் தொடங்க அவர்களை ஊக்கப்படுத்துவதோடு, அவர்களுக்கு  கடனுதவிகளை வழங்கி, பெரிய தொழில் தொடங்கும் அளவிற்கு அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். 

கிராமப்புற மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறும் போது, நகர்புறமும் முன்னேறி நமது மாவட்டமும் முன்னேறும். எனவே, வங்கியாளர்கள் தங்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்த்து வலுவான உயிரோட்டத்துடன் கூடிய மக்கள் அமைப்புளை உருவாக்க வேண்டும். மேலும், நிதி சார்ந்த பல்வேறு சேவைகளையும் முறையாக பெற வழிவகை செய்வதோடு, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களின் குடும்ப வருமானத்தைப் பெருக்க, அதிக அளவில் கடன்களை வழங்கி, பொருளாதார வளர்ச்சியில் நமது மாவட்டமும் முன்னேற, வங்கியாளர்கள் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே பேசினார்.
நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூடுதல் இயக்குநர், செல்வராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிச்சை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் பிரபாகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம்குமார், நாகர்கோவில் மாநகராட்சி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  13 வங்கிகளை சார்ந்த கிளை மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 120-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory