» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திற்பரப்பு அருவியில் பெண்களை படம் எடுப்பு : மாணவர்களுக்கு எச்சரிக்கை

வெள்ளி 13, செப்டம்பர் 2019 12:17:46 PM (IST)

திற்பரப்பு அருவியில் குளிக்க வந்த பெண் சுற்றுலா பயணி களை கல்லூரி மாணவர்கள் படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை  வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனால் கேரளாவில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களிலும் அதேபோல் குமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் நேற்று மதியம் கேரளாவிலிருந்து பெண்கள் உள்பட சிலர் ஒரு வேனில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் அறிவியல் குளித்து மகிழ்ந்த பின்னர் அங்குள்ள பார்க்கில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திற்பரப்பு பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அருவி பகுதிக்கு வந்தனர். அவர்கள் கேரளா பெண்களை செல்போனில் படம் எடுத்ததார்களாம். 

இதனை பார்த்த சிலர் அவர்களை கண்டித்து உள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் தாங்கள் படம் எடுக்கவில்லை என கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுண் பஞ்சாயத்து ஊழியர்களிடம்  புகார் தெரிவித்தனர். அவர்கள் அந்த இளைஞர்களின் செல்போன்களை வாங்கி பார்த்தபோது அதில் பெண்களின் படம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து படத்தை அளித்த அளித்த ஊழியர்கள் அந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory