» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை அருகே பள்ளத்தில் விழுந்தவர் பலி

வியாழன் 12, செப்டம்பர் 2019 7:06:58 PM (IST)

தக்கலை அருகே நடந்து சென்ற போது கட்டிட தொழிலாளி ஒருவர் எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திக்கணங்கோடு தெங்கன்குழி பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (57). கட்டிட தொழிலாளி.இவரது மகளுக்கு திருமணம் முடிந்து ராஜாக்கமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று ராயப்பன், ராஜாக்கமங்கலத்தில் வசிக்கும் மகளை பார்க்க சென்றார்.மாலைவரை அங்கு தங்கியிருந்த ராயப்பன், பின்னர் வீட்டிற்கு புறப்பட்டார். பஸ்சில் தெங்கன்குழி வந்திறங்கிய ராயப்பன் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.

வீட்டிற்கு செல்லும் பாதையில்ஒரு புறம் 20 அடி ஆழ பள்ளமும் உள்ளதாம். இந்த பாதை வழியாக ராயப்பன் நடந்து சென்ற போது எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.பள்ளத்திற்குள் இருந்து ராயப்பன் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பள்ளத்தில் இறங்கி ராயப்பனை மீட்டனர். பின்னர் அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்றிரவு ராயப்பன் பரிதாபமாக இறந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory