» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு ஐடிஐ.யில் சேர விண்ணப்பிக்கலாம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 12, செப்டம்பர் 2019 12:00:25 PM (IST)

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில்  2019-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோருக்கான பொருத்துநர் தொழிற் பிரிவிற்கு காலியாக உள்ள இடத்திற்கு நேரடி சேர்க்கை 05.09.2019 முதல் 16.09.2019 வரை தற்போது நடைபெறுகிறது.  

சேர விரும்புவோர் தங்களது அசல் சான்றிதழ்களை நேரில் கொண்டுவந்து உடனடி சேர்க்கை பெற்று பயிற்சியில் சேரலாம். பிற மாவட்டத்தைச் சார்ந்த பயிற்சியாளருக்கு இலவச விடுதி வசதி மற்றும் உணவு வசதி செய்து தரப்படும். 
மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் முதல்வரை நேரில் அணுகியும்,  04652-260463, 261463, 265463. என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாமென மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory