» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மூடப்படாத கழிவுநீர் ஓடையில் விழுந்தவர் பலி

புதன் 11, செப்டம்பர் 2019 6:44:59 PM (IST)

கோட்டாரில் மூடப்படாத கழிவுநீர் ஓடையில் விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் கோட்டார் முதலியார்விளை பகுதியை சேர்ந்தவர் கேசவன் (69).கூலி தொழிலாளி. இன்று காலை அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு சரிவர மூடப்படாத கழிவுநீர் ஓடை வழியாக அவர் சென்ற போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கழிவுநீர் ஓடையில் விழுந்தாதில் அவரது தலை மற்றும் கை, கால் கழிவுநீர் ஓடையின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோட்டார் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கழிவுநீர் ஓடையில்  கிடந்த கேசவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதிகளான கோட்டார், மணிமேடை, செட்டிகுளம் உள்பட பல்வேறு இடங்களில் இது போல கழிவுநீர் ஓடைகள் சரியாக மூடப்படாமலும், மூடிகள் உடைந்தும் அபாய நிலையில் காணப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் அடிக்கடி இதில் தவறி விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் நடந்து வருகிறது என சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி நகரில் உள்ள கழிவுநீர் ஓடைகளை விரைவாக சீரமைத்து அதில் மூடிகளையும் சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory