» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக்கில் இருந்து விழுந்த பெண் பரிதாப பலி

புதன் 11, செப்டம்பர் 2019 1:29:28 PM (IST)

கருங்கல் அருகே பைக்கில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கருங்கல் அருகே பூவன்சந்தி பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவர் அப்பகுதியில்  மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரெஜி(49). இவருக்கு உடல்நிலை  சரியில்லாததால் கடந்த 5ம் தேதி ராபின்சன் தனது பைக்கில் மனைவியை  அழைத்துக்கொண்டு நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர்  அவர்கள் வீட்டுக்கு திரும்பி ெகாண்டிருந்தனர். சுங்கான்கடை  பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பைக்கின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்ததாம். 

இதில் நிலைதடுமாறிய பைக் கீழே விழுந்து இருவருக்கும் பலத்த  காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி   ரெஜி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர். ராபின்சன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory