» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் ஓணம் கொண்டாடிய கேரள மக்கள்

புதன் 11, செப்டம்பர் 2019 12:37:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
   
திருவோண திருவிழாவையொட்டி குமரி மேற்கு மாவட்ட பகுதியில் இன்று காலை முதலே பல இடங்களில் மாவேலி ஊர்வலம் நடந்தது. இதில் மன்னன் வேடமிட்டு சென்றவர்கள் முத்துக்குடை ஏந்தியபடி மலர்களை தூவி மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.கேரள மாநிலத்தின் அறுவடை திருநாளான திருவோண பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.கேரள மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இங்கும் ஏராளமான கேரள மக்கள் வசித்து வருகிறார்கள்.

ஓணப்பண்டிகையின் ஐதீகமான மாவேலி மன்னன் மக்களை சந்திக்க வருவதை குறிக்கும் வகையில் கேரளாவில் இன்று மாவேலி மன்னன் வேடமிட்டவர்கள் ஊர்வலமாக செல்வார்கள். வீடு வீடாகச் சென்று மக்களுக்கு வாழ்த்து கூறுவார்கள்.குமரி மேற்கு மாவட்ட பகுதியில் இன்று காலை முதலே பல இடங்களில் மாவேலி ஊர்வலம் நடந்தது. இதில் மன்னன் வேடமிட்டு சென்றவர்கள் முத்துக்குடை ஏந்தியபடி மலர்களை தூவி மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஓணப்பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ஓண விருந்து. இன்று ஓணம் கொண்டாடும் மக்கள் வீடுகளில் ஓணவிருந்து தயாரித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிமாறி மகிழ்ந்தனர்.ஓண விருந்தில் அறுசுவை பதார்த்தங்கள் இடம் பெற்றிருந்தது. விருந்து நிகழ்ச்சி முடிந்த பின்பு வாலிபர்கள் புலி வேடமிட்டு விளையாடி மகிழ்ந்தனர். ஆடு புலி ஆட்டம், களரி, கம்பு சுற்றுதல் போன்ற ஆட்டங்களும் களை கட்டியது.

திருவோண திருவிழாவான இன்று காலையில் ஓணம் கொண்டாடும் மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். இதற்காக கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.நாளை ஓணப்பண்டிகையின் இறுதிநாள் கொண்டாட்டம் நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory