» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மக்கள் குறைதீர் கூட்டம்: பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் உதவி வழங்கல்

புதன் 11, செப்டம்பர் 2019 10:38:40 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில்பயனாளிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே திங்கள்கிழமை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு,  ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்தார். கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை,  விதவை உதவித் தொகை  உள்பட  பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி  471 மனுக்கள் பெறப்பட்டது.  இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், கல்குளம் வட்டம், வாள்வச்சகோஷ்டம் கிராமத்தைச் சேர்ந்த வில்பிரட் என்பவர் நிகழாண்டு ஜூன் மாதம் மின்சாரம் பாய்ந்து இறந்ததை அடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம், கிள்ளியூர் வட்டத்தில்இனையம் புத்தன்துறை கிராமத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு  மீன்பிடிக்க சென்று உயிரிழந்த நெல்சன், ராஜ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் உள்பட முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் உதவித் தொகைக்கான காசோலையை அவர்களது குடும்பத்தினரிடம் ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர்ரேவதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் அபுல் காசிம்,  அரசு  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory