» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாவட்டஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 8:44:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டஆட்சியரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வரும் 12 ம் தேதி நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், கொட்டாரம் மேற்கு வருவாய் கிராமம், கொட்டாரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சமூக நலக்கூடம், சந்தையடியில் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மனுநீதித்திட்ட முகாமில் மனுக்கள் பெறும்முதற்கட்ட நிகழ்ச்சி 12.09.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே, அகஸ்தீஸ்வரம் வட்டம், கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory