» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்ணை பாலியல் பலாத்காரம் தொழிலாளி கைது

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 8:28:55 PM (IST)

பேச்சிப்பாறை அருகே மயக்க மருந்து கொடுத்து பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே தச்சமலை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (50). கட்டிட தொழிலாளி. லட்சுமணன் வீடு அருகே பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.இதனால் அந்த பெண் வீட்டில் தனியாக தங்கி இருந்தார். 

இந்த பெண்ணிடம், லட்சுமணன் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த பெண் கண்டித்தார். என்றாலும் லட்சுமணன் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வீட்டிற்கு லட்சுமணன் அத்துமீறி சென்றார். அங்கு தனியாக இருந்த பெண்ணுக்கு லட்சுமணன் மயக்க மருந்து கொடுத்தாராம்.

மயக்க மருந்து கொடுத்ததும் அந்த பெண் மயங்கினார். சிறிது நேரம் கழித்து அந்த பெண் கண்விழித்து பார்த்த போது தன்னை லட்சுமணன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதை அறிந்தார்.அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 

போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமணன், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மார்த்தாண்டம் மகளிர் போலீசார் லட்சுமணணை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

முதியவரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

திங்கள் 17, பிப்ரவரி 2020 6:10:57 PM (IST)

மனைவியை தீவைத்து எரித்ததாக விவசாயி கைது

திங்கள் 17, பிப்ரவரி 2020 1:23:51 PM (IST)

களியக்காவிளை அருகே இலவச மருத்துவ முகாம்

திங்கள் 17, பிப்ரவரி 2020 10:38:42 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory