» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓணம் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை ரத்து : கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 7:10:59 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்படுகிறது என கன்னியாகுமரி ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் செயல்முறை ஆணையில் 11.09.2019 (புதன்கிழமை) அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி ஆணையிடப்பட்டு, மேற்படி விடுமுறைக்கு ஈடாக 2019  செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (14.09.2019) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவித்து ஆணையிடப்பட்டது.

இந்நிலையில், 11.09.2019 அன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்படுவதால், 11.09.2019 (புதன்கிழமை) அன்று பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 11.09.2019 (புதன்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை வழங்கி அதற்கு ஈடாக 2019 செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை (14.09.2019) அன்று வேலை நாளாக அறிவித்த உத்தரவை இரத்து செய்து,  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் வடநேரே  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 10:18:24 AM (IST)

முதியவரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

திங்கள் 17, பிப்ரவரி 2020 6:10:57 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory