» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓணம் பண்டிகை : பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 1:55:55 PM (IST)

ஓணம் பண்டிகையையொட்டி முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில், தெய்வத்தின் பூமியான கேரளத்தின் அதி முக்கிய விழாவான ஓணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறம் பிறழா ஆட்சி நடத்திய மாமன்னன் மகாபலிச் சக்கரவர்த்தியின் சொல் தவறாமையை சோதிக்க மூவடி நிலம் கேட்டு மண்ணையும், விண்ணையும், ஈரடியாக்கி மூன்றாம் அடிக்கு தன் சிரம் தந்து சொல் காத்த பெருமைக்கு இறவா தன்மை கொடுக்க பகவான் மகாவிஷ்ணுவால் அளிக்கப் பெற்ற வரமே திருஓணப் பண்டிகை.இந்த அற்புத திருநாளில் சத்தியம் தவறா மகாபலிச் சக்கரவர்த்தியையும், வாமனனாக வந்து அருளிய பகவான் மகாவிஷ்ணுவையும் வணங்குவோம். எம் மண்ணிற்கும், மக்களுக்கும் நலன்கள் குவிய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 27, பிப்ரவரி 2020 10:14:52 AM (IST)


Sponsored Ads
Thoothukudi Business Directory