» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் அருகே இளைஞர் மர்மமான முறையில் மரணம்

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 1:27:42 PM (IST)

நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் ரத்த காயத்துடன் இளைஞர் சடலமாக கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள குஞ்சன்விளையில் தென்னந்தோப்பில் ரத்த காயத்துடன் இளைஞர் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சுசீந்திரம்  போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு சுமார் 37 வயது மதிக்கக்கூடிய இளைஞர், ரோஸ் கலரில் சட்டை மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தார். போலீஸார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இளைஞரின் சட்டைப் பையில் இருந்த ஆதார் அட்டையில் நேவிஸ் விஜில், தெற்குத் தெரு அகஸ்தீஸ்வரம் எனவும் குறிப்பிடப்படிடிருந்தது. அருகில் மது பாட்டில்கள் கிடந்தன. இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து இளைஞரின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory