» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்: நாளை துவங்குகிறது

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2019 12:00:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் நாளை திங்கள்கிழமை (ஆக.26) தொடங்குகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் அறிவித்தபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்கள் திங்கள்கிழமை (ஆக. 26) தொடங்கி 31 ஆம் தேதி வரை 6 நாள்கள் அனைத்துப் பகுதியிலும் நடைபெறவுள்ளது. ஊராட்சிப் பகுதியில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், பேரூராட்சிகளில் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்கள், பத்மநாபபுரம் மற்றும் குளச்சல் நகராட்சிகளில் அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், குழித்துறை நகராட்சியில் அங்குள்ள நகராட்சி அலுவலகம், மார்த்தாண்டம் மாத விலாசம்  நடுநிலைப்பள்ளி, திருத்துவபுரம் ஆர்.சி. தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களிலும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு அனைத்து வருவாய் கிராம நிர்வாக அலுவலகங்கள், சேது லட்சுமிபாய் மகளிர் உயர்நிலைப் பள்ளி,  மீனாட்சிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி  வெட்டூர்ணிமடம் இரட்சணியசேனை மேல்நிலைப் பள்ளி, பாம்பன்விளை அரசு தொடக்கப் பள்ளி, தம்மத்துக்கோணம்  அரசு நடுநிலைப் பள்ளி, வடசேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கோரிக்கைகள், குறைகள் தொடர்பான மனுக்கள்அலுவலர்களிடம் நேரில் அளிக்கலாம்.  கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி  பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory