» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

என்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - இளைஞர் பரிதாப பலி

சனி 24, ஆகஸ்ட் 2019 8:12:00 PM (IST)

 என்.ஜி.ஒ. காலனி அருகே சாலை விபத்தில் மெக்கானிக் பலியானார்.

ஈத்தாமொழியை அடுத்த நங்கூரன்பிலாவிளையை சேர்ந்தவர் கார்த்திக் (22). ஏ.சி. மெக்கானிக் வேலை செய்து வந்தார்.கார்த்திக் சம்பவத்தன்று வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பினார். என்.ஜி.ஒ. காலனி அருகே சென்ற போது எதிரே அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரன் என்பவர் இன்னொரு பைக்கில் வந்தார்.எதிர்பாரதவிதமாக இரு மோட்டார்பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இதில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டார்.உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி  கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory