» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில் நிலையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சனி 24, ஆகஸ்ட் 2019 7:02:02 PM (IST)

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும்படை தாசில்தார் சதானந்தன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் உள்ளிட்டோரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும்  திருவனந்தபுரம் செல்ல இருந்த ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலின் பெட்டிகள் சிலவற்றில் சிறு, சிறு பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளாக 30-க்கும் மேற்பட்ட சாக்குமூட்டைகள் கேட்பாரற்று அனாதையாக கிடந்தன. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவற்றில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த அரிசி மூட்டைகளுக்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதனால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது.மர்ம நபர்கள் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த திட்டமிட்டு இந்த மூட்டைகளை ரெயிலில் ஏற்றியுள்ளனர். அதிகாரிகளைப் பார்த்ததும் அந்த நபர் பதுங்கிக் கொண்டார். இதனால் அந்த அரிசியை கடத்தியது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory