» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிராெலி : குமரியில் போலீசார் சோதனை

சனி 24, ஆகஸ்ட் 2019 6:23:56 PM (IST)

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ள லாட்ஜ், ஹோட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். லாட்ஜ்களில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா? என இந்த சோதனை நடக்கிறது. மேலும் சந்தேக நபர்கள் யாராவது வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஓட்டல் ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, அஞ்சுகிராமம், கன்னியாகுமரியில் உள்ள சோதனைச்சாவடிகளுக்கு வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார் மறித்து சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேக நபர்கள் யாரும் சிக்கவில்லை. அதேசமயம் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மட் அணியாமல் வருதல் என போக்குவரத்து விதிகளை மீறி வந்த 869 பேர் சிக்கினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று 2வது நாளாக கன்னியாகுமரி கடலில் ஆய்வு மேற்கொண்டனர். அதிநவீன படகில் சென்று அவர்கள் கடலில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பது பற்றி கண்காணித்தனர். மீனவர்களின் படகுகளையும் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory