» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு அதிகாரி வீ்ட்டில் கொள்ளையடிக்க முயற்சி

சனி 17, ஆகஸ்ட் 2019 1:51:19 PM (IST)

கொட்டாரத்தில் அதிகாரி வீடு உள்பட 2 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்தது. நகை-பணம் சிக்காததால் கொள்ளையர்கள் பொருட்களை சூறையாடி சென்றனர். 

கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் டேவிட்தாஸ் ( 64). இவர் ஓய்வு பெற்ற வட்ட வழங்கல் அதிகாரி. இவர், சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்றாராம்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு டேவிட்தாசின் வீட்ின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர், படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்தனர். அதில் நகை-பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த துணிகளை அறை முழுவதும் வீசி எறிந்து விட்டு தப்பி சென்றனர்.

மறுநாள் காலையில் டேவிட்தாசின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் டேவிட் தாசுக்கும், கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory