» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

களியக்காவிளை அருகே இரு பைக்குகள் மோதல்: காயமடைந்தவர் உயிரிழப்பு

சனி 17, ஆகஸ்ட் 2019 11:46:15 AM (IST)

களியக்காவிளை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மற்றொருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

கேரளா உதியங்குளங்கரை அருகேயுள்ள செங்கல் பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் மகன் சுதீர் (31),  அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் பிஜுகுமாருடன் (41) வியாழக்கிழமை காலை மோட்டார் பைக்கில் குழித்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார். பைக்கை சுதீர் ஓட்டி வந்தார்.  களியக்காவிளை பி.பி.எம். சந்திப்பு பகுதியை கடந்து சென்று கொண்டிருந்த போது,  இவர்களுக்கு எதிரே தோவாளை  அருமைநாயகம் மகன் தினேஷ்ராஜ் (20),  அவரது நண்பர் சுவாமியார்மடம்  இம்மானுவேல் மகன் பிரபு (20)  ஆகிய இருவரும் வந்த மோட்டார் சைக்கிளில்,  இவர்களது பைக் மீது மோதியதில்,   இரு பைக்குகளிலும் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். 

இதில் சுதீர் சாலையோர மின்கம்பத்தில் மோதி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பிஜுகுமார் திருவனந்தபுரம் மருத்துவமனையிலும், தினேஷ்ராஜ், பிரபு ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் பிஜுகுமார் உயிரிழந்தார். இது குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory