» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டத்தில் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்; ரூ. 1.88 லட்சம் அபராதம்

சனி 17, ஆகஸ்ட் 2019 10:33:31 AM (IST)

மார்த்தாண்டம் சுற்று வட்டாரப் பகுதியில் விதிமுறை மீறி சாலைவரி செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும் இயக்கப்பட்ட 4 கேரள ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து,   ரூ. 1.88 லட்சம் அபராதமாக வசூலித்தனர்.

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை பகலிலும் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், களியக்காவிளை, குழித்துறை,  மார்த்தாண்டம், சுவாமியார்மடம் உள்ளிட்ட பகுதியில் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், தமிழகத்துக்கான சாலை வரி செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும் 4 கேரள ஆம்னி பேருந்துகள் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை கேரளாவிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது தெரியவந்தது.  

இதையடுத்து,   4 ஆம்னி பேருந்துகளையும் பறிமுதல் செய்து,   அப்பேருந்துகளுக்கு தலா ரூ. 47 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். பின்னர், அபராதத் தொகையாக   ரூ. 1.88 லட்சம்  வசூலிக்கப்பட்ட பின்,  பறிமுதல் செய்யப்பட்ட கேரள ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்பட்டன.கேரள பதிவெண் கொண்ட வாகனங்கள் விதிமுறை மீறி குமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், அந்த வாகனங்களின் அனுமதிச்சீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

அருண்Aug 17, 2019 - 10:40:45 AM | Posted IP 192.8*****

டே பாஸ் இல்லியா இதுக்குலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory