» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மோட்டார்பைக் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 7:53:51 PM (IST)

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் உதியன் குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதிர் (31). விளாத்தான்கரையைச் சேர்ந்தவர் பிஜுகுமார், (41). இவர்கள் இருவரும் பைக் களியக்காவிளை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார்பைக்கும் சுதிர் சென்ற பைக்கும் மோதியது.இதில் சுதிர், பிஜுகுமார், மற்றொரு மோட்டார் பைக்கில் வந்த தினேஷ் (22), பிரபு (22) ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.சுதிரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுதிர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

பிஜுகுமார் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த தினேஷ், பிரபு இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory