» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 7:01:23 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான ஜோதிநிர்மலாசாமிஇன்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான ஜோதிநிர்மலாசாமி , மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் தலைமையில் பல்வேறு துறைகளின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16.08.2019) நடைபெற்றது.நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை (நீர்;வள ஆதாரம்) மூலம் குடிமராமத்து பணிகளுக்காக ரூ.2.15 கோடி தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடப்பாண்டில் 16 குளங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த நிதியாண்டில் குடிமராமத்து பணிகளுக்காக ரூ.5.83 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு 39 குளங்களில் மராமத்து பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இத்திட்டபணிகளை விரைந்து செயல்படுத்துவதன் மூலம், பல ஹெக்டேர் பயிர்கள் பாசன வசதி பெறும். எனவே விரைந்து பணிகள் நடைபெறுவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நமது மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு என்பது இல்லை. சில இடங்களில் குடிநீர் வழங்கக்கூடிய குழாய்கள் மற்றும் மோட்டார்கள் சீரமைத்து, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சி மற்றும் பேருராட்சிக்குட்டப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்காக ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி, கழிப்பிட வசதிகளை அமைத்து, மின்விளக்குகள் பழுதடைந்தால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
நடைபெற்ற ஆய்வு கூட்டங்களில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத் சார் ஆட்சியர்கள் (நாகர்கோவில்) விஷ்ணு சந்திரன் (பத்மநாபபுரம்) ஷரண்யா அறி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) குணபாலன் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச படம் : காசி மீது 3வது குற்றப்பத்திரிகை!
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:50:25 AM (IST)

பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியா்
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:48:11 AM (IST)

பிரதமர் மோடியின் சகோதரர் கன்னியாகுமரி வருகை : விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டார்
திங்கள் 25, ஜனவரி 2021 10:33:24 AM (IST)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)

திருமண புரோக்கரை காரில் கடத்தி 23 பவுன் நகை பறிப்பு : மர்மநபர்களுக்கு வலைவீச்சு
சனி 23, ஜனவரி 2021 8:51:47 AM (IST)

திமுக ஆட்சியில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்: கனிமொழி
வெள்ளி 22, ஜனவரி 2021 10:40:33 AM (IST)
