» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆசை வார்த்தை கூறி மாணவி பலாத்காரம் : இளைஞர் கைது

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 6:39:37 PM (IST)

களியக்காவிளையை சேர்ந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கேரள இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டு கல்லூரி பயின்று வருகிறார். கடந்த மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட உறவுக்கார பெண்ணுடன் இவர் தங்கி இருந்து கவனித்துக் கொண்டார். அப்போது கொல்லம் பகுதியை சேர்ந்த அனீஷ் என்ற இளைஞனுடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. 

இதனை சாதகமாக்கிக் கொண்ட அவன், சென்ற 4ம் தேதி திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். அதன் பிறகு திருமணம் செய்ய மறுத்து மாணவியுடன் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் அனீஷை களியக்காவிளை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து

அருண்Aug 16, 2019 - 10:26:21 PM | Posted IP 106.1*****

சொருக வேண்டும் இவனை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory