» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீனவர் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடக்கும் தேதி : குமரி மாவட்டஆட்சியர் அறிவிப்பு

புதன் 14, ஆகஸ்ட் 2019 7:04:45 PM (IST)

மீனவர் குறைதீர்க்கும்நாள் கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது என குமரி மாவட்டஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் வடநேரே தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து வரும் 30ம் தேதிஅன்று முற்பகல் 11 மணிக்கு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.  எனவே மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட்ட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் , தேவைகள் அடங்கிய மனுக்களை 30.08.2019 அன்று நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.  

30.08.2019 அன்று பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.  கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory