» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாலையில் கீழே விழுந்த இளைஞர் மீது லாரி ஏறியது

புதன் 14, ஆகஸ்ட் 2019 6:02:44 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபம் அருகே பைக்கில் சென்ற இளைஞர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததையடுத்து, அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அழகியமண்டம் அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்த ஜினிஸ் (22) என்பவர் வெளிநாட்டில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். தற்போது விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்த ஜினிஸ், இன்று காலை தக்கலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரைக்கோடு பகுதியில் லாரியை முந்தி செல்ல முயற்சித்த போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி, அவர் மீது ஏறியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த ஜினிஷை அங்கிருந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory