» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆக. 22இல் முன்னோடி மனுநீதி நாள் முகாம்

புதன் 14, ஆகஸ்ட் 2019 12:30:01 PM (IST)

குமரி மாவட்டம், வெள்ளிமலை பேரூராட்சியில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை (ஆக.22)  நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கல்குளம் வட்டம், வெள்ளிமலை வருவாய் கிராமத்தில் நடைபெற உள்ள, மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதித் திட்ட முகாமுக்கு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முதல் கட்ட முன்னோடி மனுநீதி நாள் முகாம் உரப்பனவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை (ஆக. 22) காலை 10  மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.    எனவே, வெள்ளிமலை பேரூராட்சி  மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory