» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 6:41:19 PM (IST)

சுதந்திர தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் 73-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.சுதந்திர தினத்தையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சியும் இன்று நடந்தது.

பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகையும் நடந்து வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடலோர கிராமங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். 

கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜுகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory