» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு: ஹெச்.ராஜா பங்கேற்பு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 4:15:27 PM (IST)திருச்செந்தூரில் இன்று நடைபெற்ற பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாட்டில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கலந்து கொண்டார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கலையரங்கில், சென்னை தமிழ் சங்கம் சார்பில், பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சங்க புரவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார். ஓய்வுபெற்ற அரசு முதன்மை செயலாளர் ராஜாராம் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார்.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்துரை வழங்கினார். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மாநாட்டு மலரை வெளியிட்டார். அதனை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாநாட்டு கருத்தரங்கை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விமலா தொடங்கி வைத்து பேசினார். 

விழாவில் இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி, முத்துகுமாரசாமி தம்பிரான் சுவாமி, ரத்தினவேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமி, சிவப்பிரகாச தேசிக சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமி, பாலமுருகனடிமை சுவாமி, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமி, சிவஞானபாலய சுவாமி, குமரகுருபர சுவாமி, மானாமதுரை சுவாமி, சுதர்சனாச்சாரியா சுவாமி ஆகியோர் முருகபெருமானின் பெருமைகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றினர். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், பாஜக மாவட்ட தலைவர் எம். பாலாஜி,உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

samiAug 14, 2019 - 09:35:08 AM | Posted IP 162.1*****

அவரு வராம பொறவு சுடலையா வருவாரு அல்லது வீணாபோனமணி வருவாரா

ராமநாதபூபதிAug 13, 2019 - 05:02:54 PM | Posted IP 108.1*****

குருநாதா நீங்க இங்கேயும் வந்திட்டிங்களா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory