» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கூட்டுறவு நூற்பாலையில் பணம் கையாடல் : நிர்வாக இயக்குனர் பணி இடைநீக்கம்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 1:36:14 PM (IST)

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் காற்றாலைக்கு உபகரணங்கள் வாங்கியதில் லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆரல்வாய்மொழியில் கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் மின்சார தேவைக்காக 4 காற்றாலைகள் உள்ளன. இதில் 2 காற்றாலைகள் கடந்த ஆண்டு பழுதாகின. இதைத் தொடர்ந்து காற்றாலையில் பழுதான உபகரணங்களை மாற்ற நூற்பாலை நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான 250 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட உபகரணம்வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது நூற்பாலையின் நிர்வாக இயக்குனராக முத்து என்பவர் பணியாற்றினார். அவருடைய ஏற்பாட்டின் பேரில் காற்றாலையில் புதிய கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டது. ஆனால் கியர் பாக்ஸ் வாங்கியதில் பணம் கையாடல் நடந்ததாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை போலீசார் உத்தரவிட்டனர். அதன்படி நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிர்வாக இயக்குனர் வீரமுத்து மற்றும் கியர் பாக்ஸ் சப்ளை செய்த சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவன உரிமையாளர் ஆகிய 2 பேரும் கூட்டாக சேர்ந்து, கியர் பாக்ஸ் வாங்கியதில் லட்சக்கணக்கிலான பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து நிர்வாக இயக்குனர் வீரமுத்து மற்றும் சென்னை தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய நிர்வாக இயக்குனர் வீரமுத்து கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஓய்வுபெற இருந்தார். ஆனால் ஓய்வுபெறுவதற்கு முந்தைய நாள் அவரை பணி இடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory