» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேருந்து நிலையத்தில் 3 வயது குழந்தை மாயம்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 12:36:51 PM (IST)

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த  3 வயது பெண் குழந்தை மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி  அருகே சந்தைவிளை பகுதியைச் சேர்ந்த சடையான் - தேவி தம்பதியினரின்  மகள் வீரம்மா (3). சடையானும், தேவியும் நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த தம்பதியினர் தங்களின் 3 வயது மகள் வீரம்மாவுடன்  நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் பார்த்த போது குழந்தையை காணவில்லையாம்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குழந்தையை யாரும் கடத்தி சென்றிருக்கலாம் என கருதி கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மேலும் பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவையும்  ஆய்வு செய்கின்றனர்.


மக்கள் கருத்து

அருண்Aug 13, 2019 - 01:47:16 PM | Posted IP 192.8*****

ஒரு வீடு ஏற்பாடு செய்யலாமே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory