» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எஸ்.பி. அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞர்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 11:20:22 AM (IST)

நாகர்கோவிலில்எஸ்பி. அலுவலகம் முன்   தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசராணை மேற்கொண்டனர். 

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சம்பவத்தன்று ஒரு இளைஞர் தனது 8 வயது மகளுடன் வந்தார். அந்த இளைஞருடன், அவரது  தாயாரும் வந்திருந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் தான் வைத்திருந்த டீசலை தலையில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார்.  அப்போது அங்கு பணியில் இருந்த  போலீஸார், அந்த இளைஞர் கையில் இருந்த டீசல் கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர்.   

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,  குமரி மாவட்டம்,  மேலபுத்தேரியைச் சேர்ந்த மாரிமுத்து(35) என்பதும், இவருக்கு மனைவி செல்வி (28), ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் ,இவரது மனைவிக்கும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாகவும், இதை மாரிமுத்து கண்டித்ததால், அவரை அந்த இளைஞர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து மாரிமுத்து, வடசேரி போலீஸில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.  இதையடுத்து  விரக்தியில், மாரிமுத்து நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலகத்திற்கு தனது தாய் மற்றும் குழந்தையுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் மாரிமுத்துவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory