» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிறிஸ்தவ ஆலயத்தில் 4ம் முறையாக கொள்ளை

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 8:13:30 PM (IST)

இரணியல் அருகே  ஆலங்கோட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் 4-வது முறையாக உண்டியல் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆலங்கோட்டில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இதில் விசே‌ஷ ஆராதனைகள் நடைபெறும். வழக்கம்போல் சம்பவத்தன்று காலை ஆராதனை செய்வதற்காக ஆலயத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தில் இருந்த உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.இதுபற்றி சபை செயலாளர் எபனேசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். இரணியல் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அந்த ஆலயத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தபோது ஆலயத்தில் ஜன்னல் வழியாக ஒரு வாலிபர் உள்ளே நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அவர் உண்டியலை உடைத்து திருடி விட்டு செல்லும் காட்சியும் கேமராவில் பதிவாகி இருந்தது. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த கொள்ளையனை தேடி வருகிறார்கள். ஏற்கனவே 3 முறை இந்த ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து ஆலயத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் 4-வது முறையாக கொள்ளையன் அந்த ஆலயத்தில் கைவரிசை காட்டியுள்ளார்.கேமிராவில் பதிவான வாலிபரின் பெயர் மற்றும் விவரங்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory