» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 7:06:21 PM (IST)

சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திரதினம் வரும் வியாழன் அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாகர்கோவில் மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத் உத்தரவுபடி சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், சோதனை சாவடிகளை பலப்படுத்துவது குறித்தும், முடிவு செய்யப்பட்டது.சுதந்திர தினத்தையொட்டி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்வே பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். ரெயில்வே பாலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை, வள்ளியூர், நாங்குநேரி, ரெயில் நிலையத்திலும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory