» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலையில் 70 ஏ.டி.எம். கார்டுகளுடன் சிக்கிய வாலிபர்

செவ்வாய் 25, ஜூன் 2019 6:33:54 PM (IST)

குமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலையம் அருகே 70-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் தக்கலை பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் நேற்று இரவு சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தாராம்.அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதுபற்றி பொதுமக்கள் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 70-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. அவரிடம் விசாரித்த போது அவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.ஏ.டி.எம். கார்டுகள் குறித்து அவரிடம் விசாரித்தபோது அவரால் எந்தவொரு தெளிவான பதிலையும் கூற முடியவில்லை.

இதனால் அவர் வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை திருடி பணம் திருடும் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory