» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பல ஆண்டுகளுக்கு பின்துப்பு துலங்கிய கொலை வழக்கு: ஒருவர் கைது

செவ்வாய் 25, ஜூன் 2019 1:04:32 PM (IST)

களியக்காவிளை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை 9 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.

களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான ஆறயூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர், 9 ஆண்டுகளுக்கு முன் அருமனை அருகே தேமானூரில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து, அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.பிரேத பரிசோதனையில் கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

தொடர்ந்து போலீஸார்  விசாரணை நடத்திய நிலையில் 9 ஆண்டுகளாக இவ்வழக்கில் குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலை இருந்தது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனின் மகன் ஷாஜி (41) யின் நண்பரான கேரள மாநிலம் ஆறயூர் பகுதியைச் சேர்ந்த வினு (41) என்பவர் ஒரு மாதத்துக்கு முன் காணாமல் போயுள்ளார். 

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து திருவனந்தபுரம் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். இதில், ஷாஜி தலைமறைவானது தெரியவந்தது.அவரது செல்பாேன் சிக்னல் மூலம், குமரி மாவட்ட எல்லையோரப் பகுதியில் பதுங்கியிருந்த ஷாஜியை இம்மாதம் 3 ஆம் தேதி கேரள போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், தந்தை கிருஷ்ணன் சொத்துக்களை அனாதை இல்லத்துக்கு எழுதி வைப்பதாக கூறியதால் நண்பர் வினு, அபிலாஷ் ஆகியோருடன் சேர்ந்து 9 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்து அருமனை தேமானூர் ஆற்றங்கரையில் வீசியதாக  தெரிவித்தார். 

மேலும், இக்கொலை குறித்து வெளியே தெரிவிக்காமல் இருக்க அதிகமாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்ததால் ஷாஜி, தனது நண்பர் வினுவை ஒரு மாதத்துக்கு முன் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீட்டுத் தோட்டத்தில் புதைத்ததாகவும் தெரியவந்தது.இந்த வழக்கில் உடந்தையாக செயல்பட்ட ஆறயூர் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். பாறசாலை போலீஸார் கேரள மாநிலம் தூங்காம்பாறையில் உறவினர் வீட்டில் இருந்த அபிலாஷையும் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory