» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கான்கிரீட் சாலைகள் , சிறு பாலப்பணிகள் துவக்க விழா

செவ்வாய் 25, ஜூன் 2019 12:15:18 PM (IST)தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஞாலம்பொற்றை புதுக்காலனியில் ரூ.9.92 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கான்கிரீட் சாலைகள் மற்றும்  சிறு பாலப்பணியினை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் , கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஞாலம்பொற்றை புதுக்காலனியில் ரூ.9.92 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கான்கிரீட் சாலைகள் மற்றும் சிறு பாலப்பணியினை துவக்கி வைத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- 

தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஞாலம்பொற்றை புதுக்காலனியில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.9.92 இலட்சம் மதிப்பில் புதிதாக கான்கிரீட் சாலைகள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கப்படவுள்ளது. இச்சாலை அமைக்கப்படுவதினால், பாதசாரிகளின் பயணமானது மிகவும் எளிதானதாகவும், மிகுந்த பயன் உள்ளதாகவும் அமையும். 

மேலும், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கிராமத்திலிருந்து நகரத்துக்கு சென்றுவர இச்சாலைகள்  மிகவும் பயன்படும்.   இத்தகைய சாலைகள் மற்றும் புது பாலங்களை அமைக்க,  ரூ.9.92 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று, கான்கிரீட் சாலைகள் மற்றும் சிறு பாலம் அமைக்கும்  பணியினை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார், ஞாலம் ஜெகதீஸ், ஞாலம்பொற்றை புதுக்காலனி ஊர்மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory