» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரெயில் முன் பாய்ந்து எலக்ட்ரீசியன் தற்கொலை

திங்கள் 24, ஜூன் 2019 8:11:27 PM (IST)

தென்தாமரை குளம் அருகே  எலக்ட்ரீசியன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் சாமிதோப்பு செட்டி விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகன் கோகுலகண்ணன். எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். தொழில் தொடர்பாக பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார். அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது.கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் கோகுல கண்ணன் விரக்தியடைந்தார். கோகுல கண்ணன் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்றார். இன்று அதிகாலை அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை.

இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்ற போது வீட்டின் அருகே இருந்த ரெயில் தண்டவாளத்தில் கோகுல கண்ணன் தலை சிதைந்து இறந்து கிடந்தார். அவர் அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.இது பற்றி அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory