» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேங்காய்ப்பட்டணத்தில் புதியதுறைமுகம் திறந்துவைப்பு

திங்கள் 24, ஜூன் 2019 5:51:28 PM (IST)

தமிழகமுதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், தேங்காப்பட்டணத்தில் ரூ.97.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகத்தினை இன்று (24.06.2019) காணொலி காட்சி மூலம், சென்னையிலிருந்து திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம்குத்துவிளக்கேற்றி,  இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில நிதி ஒதுக்கீட்டின்கீழ், மீன்வளத்துறை மூலம்  ரூ.97.40 கோடி மதிப்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இத்துறைமுகம் நம்மாவட்டத்தில் பிரதான துறைமுகமாக கருதப்படுகின்றது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமங்களாக படகினையும் சுவர் மற்றும் தேங்காப்பட்டணம் மற்றும் இரையுமன்துறை கரையோர கட்டமைப்புகள் உள்ளடக்கியதாகும். வலை  பின்னும் கூடம், நிர்வாக அலுவலகம், மீன் ஏலக்கூடம், மீனவர் ஓய்வெடுக்கும் அறை, சிற்றுண்டி உணவகம், மோட்டார் அறை, கழிவறை என பல வசதிகளைக் கொண்டது.  துறைமுகத்தினுள் தெரு விளக்குகள் மற்றும் சாலை வசதிகள் ஆகியவை தேங்காப்பட்டணம் மற்றும் இரயுமன்துறை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு நேரடியாக சுமார் 9,500 மீனவர்கள் பயன் பெறுவதுடன், 3000 பேர் மறைமுகமாக பயனடைந்து வருகின்றனர். எனவே, தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம், அப்பகுதி மீனவ மக்களுக்கு ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றியதின்மூலம் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், ஆண்டு முழுவதும் மீன்வளர்ப்புக்கு பெரிதும் உதவுகிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன் பருவ காலங்களில் மீனவர்கள் இடம் பெயர்வதை தடுக்கவும் உதவுகிறது. இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.    

இந்நிகழ்ச்சியில், கிள்ளியூர் எம்எல்ஏ., ராஜேஷ் குமார், சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்)  ஷரண்யா அறி  துணை இயக்குநர் (மீன்வளத்துறை) லாமேக் ஜெயக்குமார், கிள்ளியூர் வட்டாட்சியர் கோலப்பன், செயற்பொறியாளர் (மீன்பிடிதுறைமுகம்);  ஆறுமுகம், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory