» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நண்பரின் மனைவியை திருமணம் செய்தவர் தற்கொலை

திங்கள் 24, ஜூன் 2019 12:30:14 PM (IST)

தக்கலை அருகே நண்பரின் மனைவியை 2வது திருமணம் செய்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் அஜித் ( 28). ஜே.சி.பி. ஆபரேட்டர் ஆக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜிதா (28) என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சஜிதா ஏற்கனவே திருமணம் ஆனவர். 

அவரது முதல் கணவர் விபத்தில் இறந்து விட்டார். கணவரின் நண்பரான அஜித், சஜிதாவுக்கு உதவிகள் செய்து வந்தார். பின்னர் சஜிதாவையே அஜித் திருமணம் செய்து கொண்டார். அஜித்துக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் சஜிதா அவரை கண்டித்து வந்தார். சம்பவத்தன்று இரவும் அஜித் குடித்து விட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. திடீரென அஜித் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டினார். 

பின்னர் சஜிதாவின் சுடிதார் துப்பாட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார். வீட்டுக்குள் சென்ற கணவரை காணாதது கண்டு சஜிதா ஓடி வந்தார். அப்போது அஜித் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடினார். அதை பார்த்து சஜிதா சத்தம் போட்டு அலறினார். அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஓடி வந்து அஜித்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் நேற்று இரவு இறந்தார்.இது குறித்து சஜிதா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory