» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி பகுதிகளில் மின்தடைஅறிவிப்பு

திங்கள் 24, ஜூன் 2019 11:38:04 AM (IST)

கன்னியாகுமரி, மீனாட்சிபுரம், தெங்கம்புதூர் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 26) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நாகர்கோவில் செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி, மீனாட்சிபுரம், தெங்கம்புதூர் ஆகிய உப மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஜூன் 26)  நடைபெறுகிறது.இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், வடிவீஸ்வரம், கோட்டாறு, கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சரலூர், ராமன்புதூர் சந்திப்பு, இந்துக் கல்லூரி, வேதநகர், தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory