» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் : வனத்துறை அமைச்சர் பங்கேற்பு

திங்கள் 24, ஜூன் 2019 10:50:28 AM (IST)வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும்தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் தலைமையில், வனத்துறை மற்றும் அரசு இரப்பர் கழக திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து, அரசு இரப்பர் கழக தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வனத்துறை மற்றும் இரப்பர் கழக திட்டப்பணிகள், இரப்பர் உற்பத்தி, பணியாளர்கள் நலன் குறித்து துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது. நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத் குளச்சல் எம்எல்ஏ., பிரின்ஸ், பத்மநாபபுரம் எம்எல்ஏ., மனோதங்கராஜ், கிள்ளியூர் எம்எல்ஏ., ராஜேஷ் குமார், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் சோகன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன்  வனத்துறை மற்றும் அரசு இரப்பர் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற தென்மண்டல வனத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (மதுரை மண்டலம்)சுப்ரத் மொகபத்ரா  தலைமை வனப்பாதுகாவலர் (திண்டுக்கல் மண்டலம்) திருநாவுக்கரசு தலைமை வனப்பாதுகாவலர் (திருநெல்வேலி மண்டலம்) தின்கர் குமார்  மாவட்ட வன அலுவலர் (திருநெல்வேலி வனக்கோட்டம்) திருமால் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் தேஜஸ்வி,  கோட்ட வன அலுவலர் (விருதுநகர்) ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory