» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நடந்தது

வியாழன் 13, ஜூன் 2019 5:41:48 PM (IST)தோவாளை வட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு வட்டங்களுக்கு 1428-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்துக்கு, விளவங்கோடு வட்டத்திலுள்ள 55 கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் ஜூன் மாதம் 12-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 19-ம் தியதி  வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. தோவாளை வட்டம், அழகியபாண்டியபுரம் குறுவட்டத்தில், அழகியபாண்டியபுரம் கிராமம், காட்டுப்புதூர் கிராமம், அனந்தபுரம் கிராமம், திடல் கிராமம், அருமநல்லூர் கிராமம், தடிக்காரன்கோணம் கிராமம், ஞாலம் கிராமம், தெரிசனங்கோப்பு கிராமம்,  ஆகிய எட்டு வருவாய் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர்தலைமையில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 130 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சித் தலைவரால் தணிக்கை செய்யப்பட்டது. ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து 15 தினங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.இந்நிகழ்ச்சியில், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார், தோவாளை வட்டாட்சியர் சொக்கலிங்கம்பிள்ளை,  தோவாளை வட்டாட்சியர் (ச.பா.தி) அருளரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory