» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் ஏரிகள் மாயம் நல்லகண்ணு குற்றச்சாட்டு

வியாழன் 13, ஜூன் 2019 1:00:44 PM (IST)

தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் ஏரிகள் மாயமாகியுள்ளதாக என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறுகிறது. இது காவிரி ஆணையத்திற்கு எதிரானது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே மரபு வழியாக இரு மாநிலங்களும் ஒத்து கொண்டால் மட்டுமே அணை கட்ட வேண்டும் என உள்ளது.கூடங்குளம் அணுஉலை கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது. இதை கைவிட வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு கருத்து சொல்ல கூட அரசு அனுமதி மறுத்து நெருக்கடி கொடுக்கிறது.தமிழகம் முழுவதும் கிட்டத்திட்ட 5 ஆயிரம் ஏரிகள் மாயமாகியுள்ளது.

தமிழக அரசின் நிர்வாகம் திறம்பட நடைபெறவில்லை. 8 வழிச்சாலை பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினைகளில் மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. ஆட்சியை காப்பாற்ற நினைக்கிறார்களே தவிர மக்களை பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

மக்கள்Jun 13, 2019 - 04:59:22 PM | Posted IP 103.1*****

அய்யா சூப்பர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory