» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மனைவியின் தங்கையை பலாத்காரம் செய்த இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது

வியாழன் 13, ஜூன் 2019 12:35:34 PM (IST)

கன்னியாகுமரி அருகே, காதலித்து மணந்த மனைவியின் தங்கையை பலாத்காரம் செய்த காண்ட்ராக்டரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் அய்யப்பன் கட்டிட காண்ட்ராக்டர் . இவர் ஐந்து வருடங்களுக்கு முன்புசரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், மனைவியின் தங்கையான 10 ஆம் வகுப்பு மாணவியை அழைத்துக் கொண்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அய்யப்பன், காதலனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து விட்டதாகக் கூறி கருக்கலைப்பு செய்யக் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு வருவதை அறிந்த காண்ட்ராக்டர் அய்யப்பன், அந்த சிறுமியை விட்டு விட்டு தப்பிச்சென்றார்.மாணவியிடம் விசாரித்த போது, அக்காள் கணவரான அய்யப்பன் 6 மாதங்களாக அவரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது.

பலாத்காரத்துக்கு உள்ளாகி கர்ப்பமான மாணவி, அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை ஒருதலையாகக் காதலித்துள்ளார். இதனை தன்னிடம் சகஜமாக பேசிப் பழகிய அக்காள் கணவர் அய்யப்பனிடமும் தெரிவித்துள்ளார்.அய்யப்பனும் காதலுக்கு உதவுவது போல நடித்து, அந்த மாணவியிடம் நெருக்கம் காட்டி உள்ளார். ஒருநாள் காதலன் அழைத்ததாகக் கூறி தனிமையான இடத்திற்கு சிறுமியுடன் சென்ற ஐயப்பன், அங்கு வைத்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின்னர், கடந்த 6 மாதங்களாக அந்த மாணவியிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் கர்ப்பமானதாக கூறியதால் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து அய்யப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.


மக்கள் கருத்து

அருண்Jun 14, 2019 - 07:24:26 PM | Posted IP 202.1*****

என்ன கொடும சார் இது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory